Friday, September 4, 2020

முக்கடல் அணை - MUKKADAL DAM

கன்னியாகுமரி மாவட்டதின் தலைநகராம் நாகர்கோவில் மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை ஆகும்.

முக்கடல் அணை


இந்திய சுதந்திரதிற்க்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் சில காலம் திருவிதாங்கூர் சமஸ்தானம் கீழ் இருந்தது
1919 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியாக அறிவிக்கபட்டது. அன்றைய காலகட்டதில் நாகர்கோவில் நகரில் தொடர்ந்து பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்தது , அப்பொழுது மக்கள் நாகர்கோவில் நகரில் இருந்த பல குளங்களை பயன்படுத்தி தங்களின் நீர் தேவையை பூர்த்திசெய்தனர் . கால மாற்றத்தில் போதிய பாராமரிப்பு இல்லாமல் குளங்கள் அழிந்து போக குடிநீர் பிரச்சனை தலைவிரிக்க ஆரம்பித்தது .
ஆகையால் மக்களின் கோரிக்கையை அடுத்து வம்பாறு ஆற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திரு நாள்பாலராம வர்மா அவர்களால் உத்தரவிடப்பட்டு 1945 ஆண்டு முக்கடல் அணை கட்டப்பட்டது.


முக்கடல் அணையின் கட்டுமானம் முழுவதும் களிமண் மற்றும் கிரானைட் கொண்டு கட்டப்பட்டது.


முக்கடல் அணையானது மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் நிரந்தப்பகுதி ஆகும்..

முக்கடல் அணை 25 அடி ஆழம் கொண்டது , மேலும் மற்ற அணைகளில் இல்லாத வகையில் -19.5 அடி ஆழம் நீரை சேமிக்கமுடியும். மைனஸ் இல் நீர் இருக்கும் பொழுது அதை மோட்டார் மூலம் பம்ப் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
1945ஆம் ஆண்டு முக்கடல் அணை கட்டுமானதிற்க்கு இடம் தேர்வு செய்யும் பொழுது அப்பகுதி மக்கள் அணை கட்டுமானம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்மா அவர்கள் மக்களின் எதிர்ப்பை சமாளித்து அப்பகுதியில் அணை கட்ட உத்தரவிட்டு பணிகள் நிடைபெற்றது.
இந்த அணை நீர் பிடிப்பு பகுதியில் பழங்கால கல்மண்டபம் ஒன்று உள்ளது கோடைகாலத்தில் அணையில் நீர் இல்லாத பொழுது இதனை காணமுடியும்.

அணையின்விபரம்

அணை உயரம் : 44.5 அடி
நீர்பிடிப்பு பகுதி : 17.48 ச.கி.
நீர்மட்ட பரப்பு : 126.9 ஏக்கர்
மிகை மடை நீளம்:130 அடி
கீழ் அகலம் : 314 அடி
மேல் அகலம் : 20 அடி
நீளம் : 1015 அடி



சில வருடம் முன்பு வரை போதிய பாராமரிப்பு இன்றி இருந்த இப்பகுதி தற்பொழுது மாநகராட்சியின் நடவடிக்கையால்
அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு சிறந்த சுற்றுலா தளம் ஆக உள்ளது . மேலும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா வருவதற்க்கு எதுவாக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.



கன்னியாகுமாரி மாவட்ட சுற்றுலாதளங்களில் முக்கிய இடம் முக்கடல் அணைக்கு உண்டு . ஒருமுறையேனும் குடும்பதுடன் கண்டு ரசியுங்கள். பொதுமக்களின் தேவைக்காக கழிவறை வசதிகள் ஏற்படுதப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வுகள் நடத்துவதற்க்கு சமுதாய நலக்கூடம் உள்ளது.


 

No comments:

Post a Comment

நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் - NAGERCOIL FILTER HOUSE

NAGERCOIL FILTER HOUSE நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை யாகும். இந்த அணையானது இந்திய சுதந்தி...